Read in English
This Article is From Jan 12, 2019

பயனர்களின் டேட்டாக்களை விற்பதற்கு 5 வருடங்களுக்கு முன்பே திட்டமிட்ட ஃபேஸ்புக்!

2018ல் சிக்ஸ்4த்ரீ(six4three) எனும் நிறுவனம் கலிஃபோர்னியானில் புதிய வழக்கை பதிவு செய்தது. அதில், ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டது.

Advertisement
உலகம்

2015ல் ஃபேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்தது சிக்ஸ்4த்ரீ(six4three) என்ற நிறுவனம். (File)

San Francisco:

சில வருடங்களுக்கு முன்பு, ஃபேஸ்புக் தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு விற்க நினைத்ததாகவும். தற்போது அதற்கு அந்த நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

அர்ஸ்டெக்னிகா தளத்தில் வெளியாகியுள்ள நீதிமன்ற ஆவணத்தின்படி, "2012ல் ஃபேஸ்புக் சில நிறுவனங்களுக்கு தகவலை விற்றதற்காக 2,50,000 டாலர் பணம் பெற்றுள்ளனர். 2014ல் தனது கொள்கைகளை மாற்றி தகவல்களை மற்றவர்களுக்கு விற்பதில்லை என்ற முடிவை எடுத்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு தனது எல்லா தகவல்களையும் மற்ற அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்துவதை நிறுத்தியது. இந்த தகவல் வெளியானது ஃபேஸ்புக்கிற்கு பின்னடைவையே தந்தது. 

வால் ஸ்ட்ரீட் ஜெர்னலில் குறிப்பிட்டுள்ளபடி ''ஃபேஸ்புக் பணியாளர்கள் விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் தகவலை தந்ததற்கு அதிக பணம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது."

Advertisement

ஃபேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர் இந்த அறிக்கையில் "குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் தவறுதலாக இடம்பெற்றவை. இதற்காக அந்த நிறுவனங்கள் நஷ்டயீடு கேட்பது தவறானது. இதற்கு எதிராக நாங்களும்  கடுமையான எதிர்வினை ஆற்றுவோம்" என்று கூறியுள்ளது. 

2018ல் சிக்ஸ்4த்ரீ(six4three) எனும் நிறுவனம் கலிஃபோர்னியானில் புதிய வழக்கை பதிவு செய்தது. அதில், ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டது. 2015ல் வழக்கு தொடர்ந்ததும் இதே நிறுவனம் தான். ஃபேஸ்புக், செனட்டிலும் இந்த குற்றச்சட்டை ஒப்புக்கொண்டது. 

Advertisement

ஃபேஸ்புக் அழைப்புகள், செய்திகள், மீடியா ஃபைல்கள் என அனைத்தையும் சேகரிப்பது குற்றம் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பயனர்களுக்கு வழங்கிவிட்டுதான் செய்தியை சேகரிப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

Advertisement