This Article is From Aug 18, 2020

மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஃபேஸ்புக் இந்திய இயக்குநர் மீது வழக்கு பதிவு!

Facebook row: இந்திய ஃபேஸ்புக்  கொள்கை இயக்குநர் அங்கி தாஸ் மீது சத்தீஸ்கர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஃபேஸ்புக் இந்திய இயக்குநர் மீது வழக்கு பதிவு!
Raipur:

மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், மக்களைத் தூண்டிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இந்திய ஃபேஸ்புக்  கொள்கை இயக்குநர் அங்கி தாஸ் மீது சத்தீஸ்கர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வெறுப்பு பேச்சுகளை கண்டுகொள்ளாத பேஸ்புக் என்ற தலைப்பில் அண்மையில் கட்டுரை வெளியிட்டது. அதில், ஆளும் பாஜவை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெற்று பேச்சு மற்றும் ஆட்சோபனைக்குரிய கருத்துகளை கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டியுள்ளது. 

தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி, முகநூல் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் இந்த கொள்கைளுக்கு பின்னால் ஃபேஸ்புக் இந்திய இயக்குநர் அங்கி தாஸ் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவிஷ் திவாரி என்ற பத்திரிகையாளர் அங்கி தாஸ் தனக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக ராய்ப்பூரில் புகார் அளித்துள்ளார். நேற்றைய தினம் ஃபேஸ்புக் இயக்குநர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாக ஐந்து பேர் மீது புகார் அளித்திருந்தார். 

அங்கி தாஸைத் தவிர்த்து, சத்தீஸ்கரைச் சேர்ந்த ராம் சாஹு மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் சின்ஹா உள்ளிட்டோர் பெயர் சத்தீஸ்கர் போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 

ஃபேஸ்புக்கில் வால்ஸ்டிரிட் ஜர்னல் குறித்து திவாரி கருத்து வெளியிட்ட போது, சாஹூவும், சின்ஹாவும் அங்கி தாஸைப் பாதுகாக்க திவாரி பதிவில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், அங்கி தாஸ் ஒரு இந்துவாக இருப்பதால், அவர் நம்பிக்கையின் நலனுக்காக பேசுகிறார் என்று கருத்து தெரிவித்திருந்தனர். 

மேலும், அந்த புகாரில் ராம் சாஹூ அவதூறான மற்றும் வகுப்புவாத உணர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டதாகவும், அவரை அச்சுறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, தனது பதிவுக்கு பிறகு வாட்ஸ்அப்பில் தனக்கு மிரட்டல் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதற்கான ஸ்கிரின்சாட் ஆதாரங்களையும் அவர் காவல் நிலையத்தில் சமர்பித்துள்ளார். 

பாஜகவினர் வெறுப்பு பேச்சை கண்டித்தால், நாட்டில் அந்நிறுவனத்தின் வணிக வாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும் என்று அந்நிறுவனத்தின் இயக்குநர் அங்கி தாஸ் கூறியதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், முகநூல் அதன் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை முகநூல் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், முகநூல் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

இதுதொடர்பாக பேஸ்புக் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, வன்முறையை தூண்டும் மற்றும் வெறுக்கத்தக்க வகையிலான பேச்சுகளுக்கு நாங்கள் தடை விதிக்கிறோம். யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி தொடர்பையும் பொருட்படுத்தாமல் உலகளவில் இந்த கொள்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்று கூறியிருந்தார். 

.