This Article is From Aug 17, 2020

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை கண்டுகொள்ளவில்லையா? என்ன சொல்கிறது ஃபேஸ்புக்!

Hate Speech Row: . யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி தொடர்பையும் பொருட்படுத்தாமல் உலகளவில் இந்த கொள்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார். 

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை கண்டுகொள்ளவில்லையா? என்ன சொல்கிறது ஃபேஸ்புக்!

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை கண்டுகொள்ளவில்லையா? என்ன சொல்கிறது பேஸ்புக்! (Representational)

New Delhi:

யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், ஃபேஸ்புக் அதன் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை முகநூல் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஃபேஸ்புக் நிர்வாகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

இதுதொடர்பாக பேஸ்புக் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, வன்முறையை தூண்டும் மற்றும் வெறுக்கத்தக்க வகையிலான பேச்சுகளுக்கு நாங்கள் தடை விதிக்கிறோம். யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி தொடர்பையும் பொருட்படுத்தாமல் உலகளவில் இந்த கொள்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார். 

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வெறுப்பு பேச்சுகளை கண்டுகொள்ளாத பேஸ்புக் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ஆளும் பாஜவை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெறுப்பு  பேச்சு மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டியிருந்தது. 

பாஜகவினர் வெறுப்பு பேச்சை கண்டித்தால், நாட்டில் அந்நிறுவனத்தின் வணிக வாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி கூறியதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி, ஃபேஸ்புக், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் வாட்ஸ்அப், முகநூலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இறுதியாக முகநூலின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று பதிவிட்டார். 

தங்களது சொந்த கட்சியில் உள்ள தலைவர்களை கூட காப்பாற்ற முடியாதவர்கள் முழு உலகத்தையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர். 

தேர்தலுக்கு முன்பாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் பேஸ்புக் உடனான கூட்டணி அமைத்து தரவுகளை பெற்று கையும் களவுமாக பிடிபட்ட நீங்கள், இப்போது எங்களை கேள்விக்குட்படுத்த வேண்டுமா என்று தகவல் தொடர்புத் துறையின் தலைவரான மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
 

.