Read in English
This Article is From Jul 16, 2018

போலி செய்திகளை நீக்கப் போவதில்லை; அதற்கு பதில் என்ன செய்ய இருக்கிறது பேஸ்புக்?

போலி செய்திகளைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது

Advertisement
உலகம்
San Francisco:

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போலி செய்திகள் அதிக அளவு பரபப்பட்டு வருகிறது. தற்போது அந்நிறுவனம் அதைக் கட்டுப்படுத்த புதிய முறையை செயல்படுத்த உள்ளது.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சமீபகாலமான போலி செய்திகள் அதிக அளவு பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், அந்நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது.

உதாரணமாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் தகவல் திருட்டால், பேஸ்புக் நிறுவனம் பெரும் சிக்கலைச் சந்தித்தது. இதனால், பேஸ்புக் செய்திகளின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால் போலி செய்திகளைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பேஸ்புக்கில் இருந்து போலி செய்திகளை தாங்கள் முற்றிலும் நீக்கப் போவதில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், போலி செய்திகளை முற்றிலும் நீக்குவது என்பது தங்கள் நிறுவனம் கடைபிடிக்கும் அடிப்படை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

இதனால் போலி செய்திகள் என்று சுட்டிக்காட்டப்படும் செய்திகளை நீக்குவதற்கு மாறாக, பயனாளர்கள் நீயூஸ் ஃபீடில் அவற்றை காட்டாமல் செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement
Advertisement