Read in English
This Article is From Jul 26, 2018

ஃபேஸ்புக் பங்குகள் சரிந்தன - 130 பில்லியன் டால்ர்கள் அவுட்

ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு 21% குறைந்ததால்,  சந்தை மதிப்பில் சுமார் 130 பில்லியன் டாலர்களை இழந்தது அந்நிறுவனம்

Advertisement
உலகம்
San Francisco:

ஃபேஸ்புக்கின் பங்குகள் நேற்று பெரிய அளவில் சரிவை சந்தித்தன. நிதி நிலைக் கண்ணோட்டம் மிக வலிமையின்றி இருந்ததால், இந்த சரிவு என்று கூறப்படுகிறது. டேட்டா திருடப்பட்ட பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த, அந்நிறுவனத்துக்கு இந்த பங்கு மதிப்பு சரிவு கூடுதல் தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு 21% குறைந்ததால்,  சந்தை மதிப்பில் சுமார் 130 பில்லியன் டாலர்களை இழந்தது அந்நிறுவனம். 

இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் பிரைவஸியில் பெரும் அளவு முதலீடுகளை செய்து வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். “ பாதுகாப்பு அம்சங்களில் செய்யும் முதலீடுகளால், எங்கள் லாபம் குறைந்து வருகிறது. அதை இந்த காலாண்டு முடிவில் பார்க்க முடியும்” என்றார் மார்க்.

மேலும் “ நாங்கள் ஃபேஸ்புக்கை தொலை தூரக் கண்ணோட்டத்துடன் நடத்தி வருகிறோம். ஒரு காலாண்டை மட்டும் கருதி அல்ல” என்று லாபம் குறைந்தாலும், தொலை தூர திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பேசுகிறார் மார்க் சக்கர் பெர்க். 
 

Advertisement