This Article is From Apr 22, 2020

ஜியோவின் பங்குதாரராக மாறும் பேஸ்புக்!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் (45,574 கோடி) முதலீடு செய்வதாக அறிவித்துள்ளோம்.

ஜியோவின் பங்குதாரராக மாறும் பேஸ்புக்!!

பேஸ்புக் இப்போது ஜியோ பிளாட்ஃபார்ம்களின் மிகப்பெரிய சிறுபான்மை பங்குதாரராக உள்ளது

New Delhi:

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இயங்குதளத்தின் குறைந்த அளவிலான பங்குகளை வாங்க 45,574 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் (45,574 கோடி) முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் அந்நிறுவனத்தின் குறைந்த அளவு பங்குதாரராக பேஸ்புக் மாறும்” என பேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

சிறு குறு வணிகங்களையும் மக்களையும் இணைக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோமார்ட்டுடன் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப்-ஐ இணைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், ஜியோவின் 9.99 சதவிகித பங்குகளை வாங்குகிறது பேஸ்புக். குறைந்த அளவிலான பங்குகளை வாங்கும் பெரிய நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. 

இந்தியாவில் தற்போது கட்டண சேவையில் ஈடுபட்டு வரும் கூகுள் பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக வாட்ஸட் அப்ஐ உருவாக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் முயற்சிக்கின்றது. வாட்ஸ் அப், கட்டண சேவைக்கான அனுமதியை இந்தியாவில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏறத்தாழ 400மில்லயன் மக்கள் வாட்ஸ்அப் செயலியினை பயன்படுத்துகிறார்கள். நாட்டில் உள்ள 80 சதகிவித ஸ்மார்ட்போன்கள் வாட்ஸ்அப் செயலியினை பயன்படுத்துகின்றன.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 2016லிருந்து செயல்பட தொடங்கியது. இந்நிறுவனத்துடன் பைனான்சியல் டைம்ஸ் 10 சதவிகித பங்குகளுக்கான பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கையால் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.