This Article is From Jun 25, 2020

’ஃபேர் அண்ட் லவ்லி’ அழகு கிரீமின் பெயரில் இனி ’ஃபேர்’ கிடையாது! - யூனிலீவர் அறிவிப்பு

தங்களது பொருளின் பெயரில் உள்ள ’ஃபேர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

’ஃபேர் அண்ட் லவ்லி’ அழகு கிரீமின் பெயரில் இனி ’ஃபேர்’ கிடையாது! - யூனிலீவர் அறிவிப்பு

’ஃபேர் அண்ட் லவ்லி’ அழகு கிரீமின் பெயரில் இனி ’ஃபேர்’ கிடையாது! - யூனிலீவர் அறிவிப்பு

Bengaluru:

உலகளாவிய நுகர்வோர் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் தனது இந்திய பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சருமம் மிளரும் அழகு கிரீமான 'ஃபேர் அண்ட் லவ்லி'-யை மறுபெயரிடுவதாக தெரிவித்துள்ளது. இந்த பெயர் கறுப்பு நிற சருமத்தின் மீதான தவறான நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தரப்பில் கூறும்போது, தங்களது பொருளின் பெயரில் உள்ள 'ஃபேர்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த கிரீம் புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக் காத்திருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்துஸ்தான் யூனிலீவர் சேர்மேன் சஞ்சீவ் மேத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் எங்கள் சரும பராமரிப்பு பரிவை மேலும் உள்ளடக்கியதாக ஆக்குகிறோம். யூனிலீவர் நிறுவனம் பிரபலமான டோவ் மற்றும் நார் தயாரிப்புகளையும் விற்பனை செய்கிறது.

இதுபோன்ற மாற்றங்களை நிறுவனம் பரிசீலித்து வருவதாக ஏற்கனவே ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்திருந்தது. 

சருமம் ஒளிரும் என விற்பனை செய்யப்படும் தயாரிப்புகள் தெற்காசியாவில் ஒரு சிறந்த சந்தையைக் கொண்டிருக்கின்றன, ஏனெனில் அவை சிறந்த சரும நிறத்தை தருகிறது என்ற சமூக ஆர்வத்தால், ஆனால் அந்த கருத்துக்கள் அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

இதேபோல், யூனிலீவரின் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவு தலைவர் சன்னி ஜெயின் கூறும்போது, "நிறமான", "வெள்ளையான" மற்றும் "ஒளிரும்" போன்ற சொற்களின் பயன்பாடு அழகுக்கான ஒரு தனித்துவமான அர்தத்தை பரிந்துரைக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம், அது சரியானது என்று நாங்கள் நினைக்கவில்லை, இதை நாங்கள் நிவர்த்தி செய்ய விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.