This Article is From Oct 25, 2018

கள்ளநோட்டுகளை வழங்கி ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை வாங்கி சென்ற தம்பதியினர்!

தம்பதியினர் கடையை விட்டு வெளியே சென்ற பின் தான் அவர்கள் அளித்தது கள்ளநோட்டுகள் என்பது தனக்கு தெரிந்தததாக லூதியானா கடை உரிமையாளர் ஷ்யாம் சுந்தர் வர்மா கூறியுள்ளார்

Advertisement
Ludhiana

கள்ளநோட்டுக்களில் எண்டர்டெயின்மென்ட் பாங்க் ஆஃப் இந்தியா என அச்சிடப்பட்டுள்ளது.

Ludhiana:

லூதியானாவில் உள்ள நகை கடையில், ஒரு தம்பதியினர் 'எண்டர்டெயின்மென்ட் பாங்க் ஆஃப் இந்தியா' என அச்சிடப்பட்டிருந்த கள்ள நோட்டுகளை கொடுத்து ரூ.1.90 லட்சம் மதிப்புள்ள 56 கிராம் நகைகளை ஏமாற்றி சென்றுள்ளனர்.

தம்பதியினர் கடையை விட்டு வெளியே சென்ற பின் தான் அவர்கள் அளித்தது கள்ளநோட்டுகள் என்பது தனக்கு தெரிந்தததாக லூதியானா கடை உரிமையாளர் ஷ்யாம் சுந்தர் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும், நகை கடை உரிமையாளர் கூறும்போது, நகை வாங்க வந்த தம்பதியினர் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். பின்னர் அவர்கள் தேர்ந்தெடுத்த நகையின் விலை கணக்கிடப்பட்டதும், பாலித்தின் பையில் வைத்திருந்த பணத்தை எடுத்து தந்துவிட்டு உடனடியாக கடையில் இருந்து சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்ற பின்னர் தான் எனக்கு தெரிந்தது அவர்கள் அளித்த பணம் போலியானது என்று, அதில் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக 'எண்டர்டெயின்மென்ட் பாங்க் ஆஃப் இந்தியா' என அச்சிடப்பட்டிருந்தது என்றார்.

Advertisement

மேலும் அவர், நான் இந்த தொழிலை துவங்குவதற்கு பல வருடங்கள் எடுத்தது, எல்லாவற்றையும் இதில் இழந்துவிட்டேன். இப்படி ஒரு பெரும் இழப்பில் இருந்து எப்போது மீண்டு வருவேன் என்று தெரியவில்லை என்றார்.

சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தம்பதியினர் வந்த சென்ற காரில் பதிவு எண் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக ஜோதான் போலீசார் தம்பதியினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 

Advertisement