Read in English
This Article is From Nov 15, 2018

தேர்தல் ஆணையத்தின் பெயரில் செயல்பட்டு வந்த போலி ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

போலி கணக்கை அதிகமானோர் ஃபாலோ செய்து வந்த நிலையில் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Advertisement
இந்தியா

தேர்தல் ஆணையத்திற்கென்று தனி ட்விட்டர் கணக்கு ஏதும் கிடையாது

New Delhi:

இந்திய தேர்தல் ஆணையத்தின் பெயரில் செயல்பட்டு வந்த 2 போலி ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின்பேரில் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

போலியான இந்த 2 கணக்குகளையும் அதிகமானோர் ஃபாலோ செய்துள்ளனர். அவற்றில் ஒரு கணக்கில் 4,751 ஃபோலோயர்கள் இருந்துள்ளனர். இந்த அக்கவுன்ட்டின் முகப்பில் தேர்தல் ஆணையத்தின் லோகோ இடம் பெற்றிருந்தது. @ElectionComm மற்றும் @DalitFederation ஆகியவை முடக்கம் செய்யப்பட்ட போலி அக்கவுன்ட்டுகள்.

தற்போது வரையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கென்று ட்விட்டர் அக்கவுன்ட்டுகள் ஏதும் கிடையாது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ட்விட்டரில் இருந்த 2 அக்கவுன்ட்டுகள் மக்களை தவறாக வழி நடத்தியுள்ளன. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் ஊடக பிரிவு புகார் அளித்தது. இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
 

Advertisement