மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் திட்டங்களை தொடங்க வேண்டும்
New Delhi: இன்று தனது ஆறாவது சுதந்திர தின உரையில் குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் மோடி, “மக்கள் தொகை வெடிப்பு” குறித்த கவலையை தெரிவித்தார். மேலும் சவாலை சமாளிக்கும் திட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
”இன்று நான் முன்னிலைப்படுத்த விரும்பும் பிரச்னை உள்ளது. மக்கள் தொகை வெடிப்பு குறித்து அதிக விவாதமும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி தனது அறிக்கையில் கூறினார்.
”மக்கள்தொகை வெடிப்பு நமது வருங்கால சந்ததியினருக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். மக்கள் தொகை வெடிப்பு குறித்து நாம் கவலைப்பட வேண்டும்.இதை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் திட்டங்களை தொடங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
எப்போதும் அதிகரித்து வரும் மக்கள்தொகை கவலைக்குரியது என்று பிரதமர் கூறினார். ஆனால் ஒரு விழிப்புணர்வு அடைந்த மக்கள் இருக்கிறார். அவர்கள் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே போது என்று சிந்தித்து விடுகிறார்கள். அவர்கள் குழந்தைக்கு தேவையானதையும் விருப்பங்களையும் நிறைவேற்ற முடியும். அவர்கள் மரியாதைக்குரியவர்கள்.
அவர்களின் செயல் தேசபக்திக்கான செயல் என்று பிரதமர் மோடி தன்னுடைய 92 நிமிட உரையில் கூறினார்.
21 ஆம் நூற்றாண்டில் தனிநபர்கள் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்கும்போதுதான் வளர்ச்சியும் செழிப்பும் தொடங்குகின்றன என்பதை இந்த நாட்டின் குடிமக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து முயற்சிகளும் அரசாங்கத்திலிருந்து முன்னெடுக்க முடியாது. அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை விஞ்சும் விளிம்பில் உள்ளது.