This Article is From Jun 25, 2019

டென்னிஸ் பந்துகளுக்கு 17-வது நூற்றாண்டு கிண்ணம், இதன் மதிப்பு என்ன தெரியுமா?

இந்த கிண்ணம் 4.8 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. இது இந்திய ரூபாயில், 34 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் பந்துகளுக்கு 17-வது நூற்றாண்டு கிண்ணம், இதன் மதிப்பு என்ன தெரியுமா?

34 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அந்த கிண்ணம்!

4.8 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 17-ஆம் நூற்றாண்டு சீன கிண்ணத்தை, ஒரு குடும்பம் டென்னிஸ் பந்துகளை போட்டு வைக்கப் பயன்படுத்தியுள்ளனர். நல்ல வேளை அவர்கள் அந்த கிண்ணத்தை தூக்கி எறியவில்லை. சுவிஸ் ஏல நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர்கள், இந்த குடுப்பத்தின் வீட்டை பார்வையிட்டு, அங்குள்ள பழங்கால பொருட்களை மதிப்பிடுகையில் இதை கண்டுபிடித்தனர். இந்த மின்னும் நிறத்துடன், பீனிக்ஸ் பறவையின் தலை போல் செய்யப்பட்ட கைப்பிடிகள் கொண்ட இந்த கிண்ணம், 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நம்பப்படுகிறது. இந்த சுவிஸ் குடும்பம், சீனாவிற்கு சுற்றுப்பயணம் செல்கையில் இந்த கிண்ணத்தை பெற்று வந்துள்ளனர்.

சுவிஸ்ஸை சேர்ந்த கொல்லர் ஏல நிறுவனத்தின் தலைமை அதிகாரியான கார்ல் கிரீன் இது குறித்து கூறுகையில்," இவர்கள் இம்மாதிரியான ஒன்றை இது வரை பார்த்ததில்லை, இந்த கிண்ணத்தை கண்டவுடன் அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள்." என்று கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,"இதன் மதிப்பை அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால், அந்த கிண்ணம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், அவர்கள் அதை காட்சிப்படுத்தி வைத்திருந்தார்கள். நாம் நம் வீட்டில் இம்மாதிரியான கிண்ணங்களை எதற்கு பயன்படுத்துவோமோ அதற்குத்தான் அவர்களும் பயன்படுத்தியிருந்தார்கள், அவர்கள் அந்த கிண்ணத்தை டென்னிஸ் பந்துகளை போட்டுவைக்கப் பயன்படுத்தினார்கள்' என்றார். 

கிரீன் கூறியதன்படி அவர்கள் இந்த கிண்ணத்தை பெர்லினில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அளித்தார்கள், ஆனால், அந்த அருங்காட்சியகமே இதை காட்சிப்படுத்த முன்வரவில்லை. பின் இந்த கிண்ணம், கொல்லர் நிறுவனத்தால், சீனாவில் ஏலத்திற்கு விடப்பட்டது. அந்த ஏலத்தில் இந்த கிண்ணம் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது. இறுதியில் 4.8 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. இது இந்திய ரூபாயில், 34 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அடப்பாவிகளா, 34 கோடி ரூபா கிண்ணத்துலையா, டென்னில் பந்துகளை போட்டு வச்சிருந்தீங்க!

Click for more trending news


.