அரவிந்த் சிங் என்பவர் அனுமானுக்கு தங்க கீரிடம் வழங்குவதாக வேண்டுதல் செய்திருந்தார்.
Varanasi, Uttar Pradesh: பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வாரணாசியி உள்ல சங்கத் மோச்சன் கோவிலில் 1.25 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை அனுமன் சுவாமிக்கு வழங்கினார். வாரணாசி நாசியை பிரதிந்தித்துவப்படுத்தி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதால் அரவிந்த் சிங் என்பவர் அனுமானுக்கு தங்க கீரிடம் வழங்குவதாக வேண்டுதல் செய்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடிஜி இரண்டாவது முறையாக அரசாங்கத்தை அமைத்தால் 1.25 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை அனுமானுக்கு வழங்குவதாக வேண்டுதல் செய்திருந்தேன் என்று ஏ.என்.ஐயிடம் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி கடந்த 75 ஆண்டுகளிலில் இல்லாத வகையில் நாட்டை கட்டியெழுப்பி வருகிறார். ஆகாவே இந்த கிரிடம் அனுமானுக்கு பிறந்த நாளுக்கு ஒருநாளுக்கு முன்னதாக வழங்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் எதிர்காலம் தங்கத்தைப் போல பிரகாசிக்க வேண்டும். இது காசி மக்களிடமிருந்து அவருக்கு கிடைத்த பரிசு என்று கூறினார்.
திங்கள் இரவு பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு வந்தடைந்தார். குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் மாநில முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 20 வரை பாஜக கொண்டாடுகிறது.