Tamilnadu weathe update: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் புயல் காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் புயல் காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக டிஜிபி, மீடபுப் படையினரை தயார் நிலையில் இருக்கச் சொல்லி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவிக்கையில், ‘தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறும்.
மேலும் இது 27, 28 ஆம் தேதிகளில் புயலாக வலுப் பெற்று தற்போதைய நிலவரப்படி வடத் தமழிக கடலோரப் பகுதியையொட்டி நகரக்கூடும். இதனால், மீனவர்கள் 25, 26 தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும், 27, 28 ஆம் தேதிகளில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவறுத்தப்படுகிறது' என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் குறித்தோ, மழை எந்தளவு பெய்யும் என்பது குறித்தோ வானிலை மையம் தற்போதைக்கு எதையும் சொல்லவில்லை. அது குறித்து வரும் நாட்களில் தெளிவாக விளக்கப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக டிஜிபி, ‘தமிழகத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி புயல் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில கார்ட்ஸ் உள்ளிட்டவர்களை அனைத்து வித தயாரிப்புகளுடன் நகர மற்றும் மாவட்ட தலைமையகங்களில் உஷார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.