This Article is From Apr 29, 2019

’70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்’- ஃபனி புயல் அப்டேட்!

Cyclone Fani: "ஃபனி புயலால் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது"

’70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்’- ஃபனி புயல் அப்டேட்!

"ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் இருக்கும்"

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி புயல் (CycloneFani) பற்றிய தகவல்களை சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்துக் கூறினார். 

பாலச்சந்திரன் பேசுகையில், ‘சென்னையிலிருந்து சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் ஃபனி புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. அது தொடர்ந்து தீவிர புயலாகவும், நாளை அதி தீவிர புயலாகவும் உருவெடுக்கும். தமிழக கடற்கரை அருகே 300 கிலோ மீட்டர் அருகில் வரை இந்தப் புயல் வரும். இதனால் நாளை வடதமிழக கடலோரப் பகுதிகளில் சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதேபோல நாளை மாலை சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

ஃபனி புயலால் (CycloneFani) வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் இருக்கும். எனவே அந்த இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறினார். 

.