This Article is From Apr 27, 2019

வங்கக்கடலில் உருவானது ஃபானி புயல்: தப்புமா தமிழகம்?

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைப்பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவானது ஃபானி புயல்: தப்புமா தமிழகம்?

இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருந்தது. இதன்பின், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தற்போது புயலமாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு ஏற்கெனவே ஃபானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை. இதனால் தமிழகத்திற்கு மழை கிடைப்பது பற்றி நாளையே தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் இதுகுறித்து கூறும்போது,

புயல் ஒருவேளை தமிழகத்தை நெருங்கி வந்தால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் புயல் விலகி சென்றுவிட்டால் நிலப்பரப்பின் ஈரப்பதம் வெகுவாக குறைந்து தமிழகத்தில் கடுமையான அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 1998 மே.30ஆம் தேதி பர்மா நோக்கி சென்ற புயலால் ஏற்பட்ட அணல் காற்றால் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதேபோல், கடந்த 2003 மே.31ஆம் தேதி பர்மாவை நோக்கி சென்ற புயலால் ஏற்பட்ட அணல் காற்றால் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இருப்பினும் அந்த நிலவரம் புயல் நகர்வை பொருத்து நாளையே தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.