This Article is From Nov 12, 2018

மாயமான முன்னாள் அமைச்சர்: பிகார் அரசை ‘லெப்ட் அண்டு ரைட்’ வாங்கிய உச்ச நீதிமன்றம்!

பிகார் அரசில் அமைச்சராக இருந்த மஞ்சு வெர்மா, ஷெல்டர் ஹோம் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டார்

ஒரு அமைச்சர் பதுங்கியுள்ளார். ஆனால், அது குறித்து எதுவும் யாருக்கும் தெரியவில்லை, உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

New Delhi:

பிகார் அரசில் அமைச்சராக இருந்த மஞ்சு வெர்மா, ஷெல்டர் ஹோம் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். கடந்த பல வாரங்களாக அவர் தலைமறைவாகவே இருந்து வருகிறார். இது குறித்தான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிமன்றம், ‘பிகார் காவல் துறையின் செயல்படாத தன்மை எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணையின் போது நீதிமன்றம், ‘முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவர் வெகு நாட்களாக தலை மறைவாக இருக்கிறார். ஒரு அமைச்சர் பதுங்கியுள்ளார். ஆனால், அது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இந்தப் பிரச்னையின் வீரியம் விளங்குகிறதா?

ஒரு மாதத்துக்கும் மேல் பிகார் காவல் துறையால் ஒரு முன்னாள் அமைச்சரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்க டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 27 ஆம் தேதியன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

.