Read in English
This Article is From Jun 22, 2019

மகாராஷ்டிராவில் 3 ஆண்டில் 12,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை : அரசு தகவல்

மூன்று ஆண்டுகளில் 12,021 விவசாயிகள் இறந்துள்ளனர். 6,888 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement
இந்தியா Edited by

நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் எழுத்துபூர்வமாக சட்டமன்றத்தில் தெரிவித்தார். (Representational)

Mumbai:


மகாராஷ்டிராவில் 2015 முதல் 2018 வரை 12,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில சட்டமன்றம் தெரிவித்தது. 

 மூன்று ஆண்டுகளில் 12,021 விவசாயிகள் இறந்துள்ளனர். 6,888 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் எழுத்துபூர்வமாக சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

 
இதுவரை 6,845 விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 1லட்சம் வழங்கபட்டுள்ளதாக தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதங்களுக்கு இடையில் மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 192 வழக்குகள் நிதி உதவிக்கு தகுதியானவை என்று அமைச்சர் தெரிவித்தார்.

192 வழக்குகளில் 182 விவசாயிகளின் உறவினர்களுக்கு நிதி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தேஷ்முக் கூறினார். 

Advertisement

மீதமுள்ள வழக்குகளில் இழப்பீட்டுக்கான தகுதியை சரிபார்க்க ஆராயப்படுகின்றன.

Advertisement