விவசாயி தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
New Delhi: ரூ. 9 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த முடியாததால், விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அதுவும் குறிப்பாக முதல்வர் கமல்நாத்தின் சொந்த தொகுதியில் நடந்திருப்பது மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மீகாசிவ்னி என்ற கிராமத்தை சேர்ந்த அகாடு உய்கே என்ற விவசாயி தனது வயலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உள்ளூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ. 9 ஆயிரத்தை கடனாக தனது மகளின் திருமணத்திற்கு உய்கே பெற்றுள்ளார். இதனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவை விவசாயி உய்கே எடுத்திருக்கிறார்.
இதுகுறித்து விவசாயி உய்கேவின் மனைவி சகல்பாதி கூறுகையில், 'எங்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்று எங்களுக்கு தெரியவில்லை' என்று தெரிவித்தார்.
விவசாயிகள் பிரச்னை இருந்து வரும் நிலையில் ஏப்ரல் 29-ம்தேதி மத்திய பிரதேசம் தேர்தலை எதிர்கொள்கிறது.