இதைப் போன்ற விண்கல்கள், பொதுவாக பூமிக்கு உள்ளே வரும்போது எரிந்துவிடும். சில நேரங்களில் நிலப் பகுதியில் இப்படி விழவும் வாய்ப்புள்ளது.
Madhubani, Bihar: பிகாரின் மதுபானி மாவட்டத்தில் இருக்கும் விவசாய நிலத்தில் கால்பந்து அளவுக்கான ஒரு விண்கல் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. திடீரென்று விளைநிலத்தின் நடுவில் இப்படியொரு விண்கல் விழுந்திருப்பது அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விண்கல் விழுவதை நேரில் பார்த்த சிலர், “வானத்திலிருந்து அது படுவேகமாக வந்து விவசாய நிலத்திற்கு நடுவில் விழுந்தது. அது விழுந்த உடன் அந்த இடத்தில் அதிகமான புகைமூட்டம் உருவானது” என்று படபடத்துக் கூறுகின்றனர்.
மாவட்ட மாஜிஸ்டிரேட் ஷிர்ஷாத் கபில் அஷோக், இது குறித்துப் பேசுகையில், “விவசாயிகள், அவர்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, வானத்திலிருந்து இந்த விண்கல் விழுந்துள்ளது. அது நிலத்தில் விழுந்தபோது அதிக சத்தத்தை எழுப்பியுள்ளது” என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
விண்கல் விழுந்த நேரத்தில் ஏற்பட்ட புகைமூட்டம் தனிந்ததை அடுத்து, அதை எடுக்க முயன்றுள்ளனர் விவசாயிகள். நிலத்திலிருந்து சுமார் 4 அடி ஆழம் வரை அந்த விண்கல் சென்றுள்ளது. “அதை நாங்கள் முதன் முதலில் பார்க்கும்போது பலபலவேன இருந்தது. சுமார் 15 கிலோ இருக்கும்” என்கிறார் அஷோக். விஞ்ஞானிகள் அந்த விண்கல்லை ஆராய்ந்து வருகின்றனர்.
இதைப் போன்ற விண்கல்கள், பொதுவாக பூமிக்கு உள்ளே வரும்போது எரிந்துவிடும். சில நேரங்களில் நிலப் பகுதியில் இப்படி விழவும் வாய்ப்புள்ளது.
.
பாட்னா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட விண்கல்லை சோதிக்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கூட, தமிழகத்தில் ஒரு விண்கல் விழுந்தது. அதில் ஒரு பேருந்து ஓட்டுனர் கொல்லப்பட்டார் என்றும் 3 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ரஷ்யாவின் யூரல் மலைப் பிரதேசத்தில் ஒரு பெரிய விண்கல் விழுந்தது. இதனால், மிகப் பெரிய நில அதிர்வு உண்டானது. அந்த சம்பவத்தினால் சுமார் 1,200 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
விவசாயிகள் சொன்னது போன்று, விவசாய நிலத்தில் விழுந்தது விண்கல்தான் என்று உள்ளூர் விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் நாசா அமைப்பு, அதை ஏற்றுக் கொள்ளவில்லை.