தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் விளை நிலங்களிலும் மக்கள் வாழும் பகுதிகளிலும் யானைகள் புகுந்து நாசம் செய்வது தொடர்கதையாகியுள்ளது. இதைத் தடுக்க, விளை நிலங்களுக்காக போடப்படும் வேலிகளில் தேன்கூடு அமைக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாபநாசத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அமைச்சர். அப்போது, ‘யானைகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் பிரச்னை வருகிறது. இதைத் தடுக்க விளை நிலங்களுக்காக அமைக்கப்படும் வேலிகளில் தேன்கூடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார வேலிகளை விட இதைப் போன்ற வேலிகள் மிகவும் பாதுகாப்பானவை’ என்று தெரிவித்துள்ளார்.
தேனீக்களின் சத்தம் யானைகளை அருகில் விடாது என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் தேன்கூடு அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)