This Article is From Jul 10, 2019

'பிக் பாஸ்': முதலில் வெளியேறிய பாத்திமா, முன்றாவது கேப்டனான அபிராமி!

பிக் பாஸ் நிகழ்ச்சி காட்டாத பக்கத்தை நமக்கு விவரிக்கிறார் முதலில் வெளியேறிய பாத்திமா. அபிராமியின் கோபம், அழுகைக்கு பின் உள்ளது என்ன?

'பிக் பாஸ்': முதலில் வெளியேறிய பாத்திமா, முன்றாவது கேப்டனான அபிராமி!

ஹைலைட்ஸ்

  • பிக் பாஸ் நிகழ்ச்சி காட்டாத பக்கத்தை விவரிக்கும் பாத்திமா
  • அபிராமியின் கோபம், அழுகை, இது குறித்து பாத்திமா என்ன கூறுகிறார்?
  • கேப்டனாக இந்த வாரத்தில் வீட்டின் அமைதியை அபிராமி உறுதி செய்வாரா?

இது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது தொடர். இரண்டு வாரங்கள், ஓரே ஒரு எளிமினேஷன், ஆனால் சுவரஸ்யமான கட்டத்தை அடைந்துவிட்டது. பல முறன்பாடுகள், பல சண்டைகள், பல கருத்துகள், இவை அனைத்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு காட்டிய பக்கங்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி காட்டாத பக்கத்தை நமக்கு விவரிக்கிறார் முதலில் வெளியேறிய பாத்திமா. அப்படி 'பிக் பாஸ்' வீட்டில் என்னதான் நடக்கிறது?

இரண்டு வாரங்கள், முதல் வாரம் எளிமினேஷன் கிடையாது. இரண்டாவது வார எளிமினேஷனில் கேப்டனின் பெயர் இடம் பெறக்கூடாது. நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள் வனிதாவும், மோகன் வைத்தியாவும். சுமுகமாக, சென்ற முதல் இரண்டு நாட்கள், மீரா புயலால் சிதைகிறது. யார் பக்கம் தவறு என்ற முடிவிற்கே வரமுடியவில்லை. அன்று வரை எந்த ஒரு பெரிய பிரச்னையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத மதுமிதா, 'தமிழ் பெண்' என்ற வார்த்தையின் மூலம் கவணத்தை தன் பக்கம் ஈர்க்கிறார். இந்த வார்த்தை, வீட்டில் மிகுந்த பேசுபொருளாக உருவெடுக்கிறது. அபிராமியை முன்வைத்துதான், இந்த வார்த்தை பேசப்பட்டதாக அவர் கொந்தளிக்கிறார். ஒவ்வொரு முறை அவருக்கு பிரச்னை வரும்போதும், செரின், சாக்ஷி, முகேன், கவின், வனிதா, ரேஷ்மா என ஒரு பட்டாளம் இவருக்கு ஆதராவாக நிற்கிறது. இதன் விளைவாக கவின், சாக்ஷி ஆகியோர் கூட நாமினேசன் பட்டியலில் இணைகிறார்கள். ஆனால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள், அது வேறு கதை.

ktsoe8t8

நிறைய அழுகைகள், நிறைய கூச்சல்கள், நிறைய புரணிகள், பேச்சே இல்லாமல் பிரச்னைக்கு காரணமாக நிற்கும் சிலர் அது மட்டுமின்றி பல முறன்பாடுகளுடன் அந்த வீடு பயணம் செய்கிறது. இடையில் அங்கங்கே சாண்டி மாஸ்டர் காமெடி கலாய்கள், கவினின் காதல் அரட்டைகள், என பாதை மாறினாலும், அந்த பிரச்னை ஓய்ந்தபாடில்லை. மதுமிதாவின் செயல்கள், வீட்டிலிருந்தவர்களை அவரின்மீது, கோபப்படுத்த தூண்டியது. மதுமிதாவுடன் மீராவும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார். விளைவு என்னவாக இருந்தது என்றால், இரண்டாவது வாரத்தில் 'பிக் பாஸ்' வீட்டை விட்டு யார் வெளியே சென்றால், வீடு நன்றாக இருக்கும் என்ற கமல் ஹாசனின் கேள்விக்கு, ஒருமித்த குறலாக மீரா, மதுமிதாமீது வாக்குகள் குவிகின்றன. ஆனால், இவர்கள் இருவரும்தான் முதலில் காப்பாற்றப்படுகிறார்கள். எதிர்பாராத விதமாக பாத்திமா பாபு வெளியேறுகிறார்.

ui6h0a18

அபிராமி தன் வாக்கை மீராவின் மீது பதிகிறார். இதுநாள் வரை பேசு பொருளாக இருந்த மதுமிதா அவுட்-ஆப் டாபிக் ஆகிறார். தற்போது, அந்த இடத்தில் அபிராமி. பேசுபவர்கள் யார் என்றால், அவர்களுடைய நட்பு வட்டாரம் தான், சாக்ஷி, செரின், வனிதா. 'இவளுக்காகத்தான் நம்ம மது கிட்ட சண்ட போட்டோம், அதனால தான் எளிமினேன்ல நின்னோம். யார் காரணமாக இருந்தாங்கலோ, அவள விட்டுட்டு வெற ஒரு ஆள் வெளிய போன நல்ல இருக்கும்னு சொல்றாலே!" என்பது அவர்களின் கோபம். இது தவறில்லை. இவர்கள் இப்படி பேசுவதை, அறியாமல் இருக்கிறார் அபிராமி.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், இந்த வாரம் இவரை நாமினேட் செய்து வெளியே அனுப்ப போகிறார் என்பதில் அபிராமி உறுதியாக இருந்தார். இந்த இரண்டு வாரங்களில் கேமரா அபிராமியின் அழுகை, அபிராமியின் கோபம் ஆகியவை மட்டுமே நமக்குத் தெரிந்திருந்தது. ஆனால், இந்த இரண்டு வாரங்களில் மன ரீதியாக எப்படி பாதித்திருந்தார் என்பதை, பாத்திமா பாபு ஒரு தனியார் நேர்காணலில் விளக்கியிருந்தார். அவர் மனரீதியாக சந்தித்த அழுத்தம், அவரை கடுமையாக அழ வைத்தது, கடுமையாக கத்த வைத்தது, வீட்டை விட்டு வெளியேருகிறேன் என கதற வைத்தது, அதற்கும் மேலாக தன்னை தானே வருத்திக்கொள்ள வைத்தது. இவர், அந்த அழுத்தத்தின் காரணமாக தன்னை தானே காயப்படுத்திக்கொள்கிறார். ஒரு மனநல ஆலோசகருடனான உரையாடலுக்கு பிறகு சற்று அழுத்தம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார் என கூறுகிறார் பாத்திமா.

பாத்திமா வெளியேறியதும், அவர் கைகளுக்கு ஒரு சக்தி வழங்கப்படுகிறது. அடுத்த வார தலைவருக்கான போட்டிக்கு 3 பேர், அதை பாத்திமா தேர்வு செய்யலாம். பாத்திமாவின் தேர்வு சாண்டி, தர்ஷன் மற்றும் அபிராமி. மூன்று பேருக்கும் ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது. பிக் பாஸ், ஒருவர் நிச்சயம் வெளியேற வேண்டும் எனக் கூறியது, பெருந்தன்மையாக வெளியேறுகிறார், சாண்டி. இப்போது போட்டி தர்ஷன், அபிராமி இடையே.

7akdr9qg

நிச்சயம், இந்த இடத்தில் தர்ஷனின் பன்பை பற்றி கூறியே ஆக வேண்டும். முதலில் சற்று சிந்தித்தாலும், நான் தற்போது இந்த போட்டியிலிருந்து விளகியாக வேண்டும் என விலகுகிறார். ஒருபுறம் இந்த வார தலைவராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அபிராமியும் அனைவருடன் சேர்ந்து, ஏன் தர்ஷன் விலகினார் என கேள்வி எழுப்ப, தர்ஷன் அளித்த பதில், அந்த பன்பு நிச்சயம் பாராட்டத்தக்கது, கற்றுக்கொள்ள வேண்டியது. ஒருவர் கடினமான நேரங்களில் உள்ளார்கள் என்றால், அவருக்காக நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். அதை தர்ஷன் செய்தார். 'அவள் கஸ்டத்தில் இருக்கிறாள். என்னை விட அவளுக்குதான் அந்த பதவி அவசியம்' என தர்ஷன் கூறிய பதில், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தற்போது, பிக் பாஸ் வீட்டின் கேப்டன் அபிராமி. இந்த ஒரு வாரம், தான் கேப்டன் பதவியை விட்டு செல்லும்போது, இந்த வீடு ஒர் பிரச்னைகள் இல்லாத வீடாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்காக முயற்சிகளை எடுக்கிறார். அந்த வாரத்திற்கான அணிகள் பிரிக்கப்படுகின்றன. அவர் தீர்க்க நினைத்த முதல் பிரச்னை, மதுமிதா. ஆனால், இம்முறை முன்பு செய்த தவறை திருத்திக்கொண்ட அபிராமி மதுமிதாவை தனியாக அழைத்துப் பேசுகிறார். முன்பு இருந்த அபிராமிக்கு, கேப்டன் அபிராமிக்கு பல மாற்றங்கள் இருந்தன. பொருமையாகவே உரையாடலை நகர்த்தினார். பல முறன்பாடுகள், ஆனால் இறுதியில் ஒரு மாதிரி பிரச்னை பேசித் தீர்க்கப்பட்டது.

அந்த உரையாடலை, தன் நட்பு வட்டாரத்திற்குள் பகிற வருகிறார். 'எப்போது பிரச்னை நடந்தாலும் வனிதா அங்கிருப்பார், பிரச்னையை தீர்த்து வைக்க முயற்சிக்கிறாரோ இல்லையோ, அது பூதாகரமாக வெடிக்க காரணமாக இருப்பார்', என்பது பிக்பாஸ் வீட்டில் சிலரின் கருத்து. அதனை உறுதி செய்யும்படி சாக்ஷி, செரின், அபிராமி உரையாடலுக்கு இடையே வனிதா பலமுறை குறுக்கிடுகிறார். அவர் சொல்ல வந்தது முழுமையாக பரிமாறப்படவில்லை. விளைவு மீண்டும் அவர்களுக்கு தெரியாமலேயே நட்பிற்குள் விரிசல். தற்போது, தொழியாக பார்த்த ஒருவர், விரோதியாக பார்க்கப்படுகிறார். இடையில் சேரன் சில அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

s84bea0g

இதுவரை ஒருவர் பற்றி பேசப்படாமலே இருந்தது, லாஸ்லியா. தர்ஷன் மாதிரி கவணிக்கப்பட வேண்டிய ஒருவர். அனைவரும், அபிராமியை ஒதுக்கியபோது, அவர் வந்து கூறியது இதுதான்,"இது ஒரு வாய்ப்பு, இது உனக்கு கிடைத்த வாய்ப்பு, இந்த வாய்ப்பு வேறு யாருக்கு வேண்டுமானாலும் கிடைத்திருக்கலாம். ஒருவேளை, இதை நீ வீனடித்தால், அவருடைய வாய்ப்பை பரித்து வீனடிக்கிறார் என்று அர்த்தம். யோசி" என்று அவர் கூறிய வார்த்தைகள், தர்ஷனுடன் லாஸ்லியா ஆகியோர் வயதளவில் மட்டுமே குழந்தைகள் என் எண்ண வைக்கிறது.

அனைத்து இடத்திலும் பிரச்னைக்கு காரணமாக வனிதா நிற்கிறாரா, இதன் விளைவாக வீட்டை விட்டு வனிதா வெளியேற்றப்படுவாரா, தன் நட்பு வட்டாறம் நினைப்பது தவறு என அபிராமி புரிய வைப்பாரா, லாஸ்லியா கூறியதுபோல வாய்ப்பை சரியாக அபிராமி பயன்படுத்துவாரா, பிக்பாஸின் வரும் நாட்கள் பதில் சொல்லும்.

-சு முரளி

.