Read in English
This Article is From Dec 13, 2018

செயற்கை நுண்ணறிவு நெறிமுறையோடு வந்தால் நல்லது: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை செயற்கை நுண்ணறிவு பற்றிய கேள்விக்கு அவை சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும்

Advertisement
உலகம் (c) 2018 The Washington PostPosted by

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை செயற்கை நுண்ணறிவு பற்றிய கேள்விக்கு அவை சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும். அந்த நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது டெக் நிறுவனங்களின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தான் புதுமையின் உச்சத்துக்கு தொழில்நுட்பத்தை அழைத்து செல்பவை. ஆளில்லா கார், நோய் கண்டறியும் கருவி ஆகியவை செயற்கை நுண்னறிவு தொழில்நுட்பத்தின் இன்றியமையாதவை. அவற்றை கவனமாக கையாள வேன்டும் என்றார்.
இதனை உருவாக்குவது மட்டும் வேலையல்ல.. சரியாக நெறிமுறை படுத்தவேண்டும் என்றார்.

இது நீண்ட நாளில் பயன்தரக்கூடியது. ஆனால் இது சரியாக தொழில்நுட்பமாக மனிதனை எந்த இடத்திலும் பாதிப்பையோ, ஆபத்தையோ ஏற்படுத்தாத தொழில்நுட்பமாக இருக்க வேண்டும். எலான் மஸ்க் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப நிறுவனர்கள் ''செயற்கை நுண்ணறிவு அணு ஆயுதங்களை விட ஆபத்து நிறைந்தது'' என்று கூறியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் அவசியமானவை தான். ஆனால் அவை எந்த முடிவையும் மனித கட்டுப்பாடு இல்லாமல் எடுக்கக்கூடாது என்பது போல வடிவமைக்கப்பட வேண்டும். அரசு அவற்றை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்றார். அதே சமயம் சிலர் சொல்வதை போல மொத்தமாக செயற்கை நுண்னறிவை தவிர்க்கவும் கூடாது என்றார்.

Advertisement

மனிதனை கொல்லுவதற்காக வடிவமைக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்படி ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு அரசு நெறிமுறைகளை தளர்த்தக்கூடாது என்று கூறிய சுந்தர் பிச்சையிடம் சீனாவில் கூகுள் உருவாக்கும் தேடுதளத்தில் சீன மொழியின் சர்ச்சையான வார்த்தைகள் புரியுமா, உதாரணத்துக்கு டியானன்மென் ஸ்கோயர் உயிரிழப்பு போன்ற வார்த்தைகள் புரியுமா என்றதற்கு... இது ஹைப்போதடிக்கல் என்று கூறிவிட்டு சென்றார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement