பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதி தெரிவித்தார்.
New Delhi: கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் “மத்திய அரசிடம் வந்து வந்து பணம் கேட்க வெட்கமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் ஜிஸ்டி அமலாக்கத்தின் போது ஏற்பட்ட இழப்பீட்டை கோரி அமைச்சர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அரசியலமைப்பு திருத்த மசோதாவின் கீழ், வரி வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மாநிலங்களவையில் காங்கிரஸ் இந்த பிரச்சினையை எழுப்பியது.
மாநிலங்களுக்கான இழப்பீடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சருடன் நாங்கள் விவாதித்தோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நவம்பர் வரை இழப்பீடு வழங்க கோரியுள்ளோம். நிதியில்லாமல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். சிறைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மூட முடியாது. ஓய்வூதியம் செலுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. என்று பஞ்சாப் நிதி அமைச்சர் மன்பீத் சிங் படல் கூறினார்.
“நாங்கள் ஒவ்வொரு நாளும் டெல்லிக்கு வரமுடியாது… பணம் கேட்க வெட்கமாக உள்ளது. நன்றாக உணர முடியவில்லை. இந்திய அரசு பணம் செலுத்த வேண்டிய கடமையில் உள்ளது” என்று அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமன் விரைவில் நிதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஜிஎஸ்டி மாநிலங்களின் வரி வருவாயில் 60 சதவீதத்தை கொண்டுள்ளது. பல மாநிலங்கள் ஏற்கனவே பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. சில மாநிலங்கள் கூடுதல் கடனில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த வார தொடக்கத்தில் ஜிஎஸ்டி வசூல் நவம்பர் மாதத்தில் ரூ. 1.03 லட்சம் கோடியாக இருந்தது. இது எட்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 1லட்சம் கோடியைத் தாண்டியது. மாநில பங்களிப்பு ரூ. 27, 144 கோடியாகும்.
மேல் வரியிலிருந்து ரூ. 50,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அதுவும் ஏன் வழங்கப்படவில்லை என்று நிதியமைச்சர் கூறவில்லை. டெல்லி 3,600கோடி செலுத்தப்பட வேண்டியுள்ளது. 2019 ஜுன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இழப்பீடாக ரூ. 27,955 கோடி வெளியிடப்பட்டது. ஆறு அமைச்சர்களும் நிதி வழங்குவதுகுறித்து காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக தெரிவித்தனர்.