This Article is From Jul 13, 2019

பாதுகாப்பாக உணர்கிறோம் : காதல் திருமணம் செய்து கொண்ட பாஜக எம்.எல்.ஏ மகள் சிறப்பு பேட்டி

வீடியோ ஊடகங்களினால் வெகுவாக பரவியது. இதையடுத்து புகார் கொடுத்த பெண்ணான சாக்‌ஷிக்கு போதிய பாதுகாப்பு கிடைத்துள்ளது

பரெல்லி தொகுதி எம்.எல்.ஏவின் மகள் சாக்‌ஷி மிஸ்ரா

New Delhi:

உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ராஜேஸ் மிஸ்ராவின் மகள் சாக்‌ஷி பிற சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இதனால், தனக்கும் தன்னுடைய கணவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்றும் தனக்கு பாதுகாப்பு தேவை என்று பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ ஊடகங்களினால் வெகுவாக பரவியது. இதையடுத்து புகார் கொடுத்த பெண்ணான சாக்‌ஷிக்கு போதிய பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சாக்‌ஷி “தற்போதுதான் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும், காவல்துறை அதிகாரிகள் முதலில் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் ஊடகங்களில் எங்களைப்பற்றி பேசவும் தான் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது பயமின்றி பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்” என்று சாக்‌ஷி மிஸ்ரா NDTVயிடம் கூறியுள்ளார். 

சாக்‌ஷி மிஸ்ரா, 29 வயதான அஜிஸ் குமார் என்ற தொழிலதிபரை பிரக்யராஜ் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். 


சாக்‌ஷி “நான் அந்த வீட்டில் வசித்திருக்கிறேன். அவர்கள் சாதி முறையை நம்புகிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனது சொந்த சாதியில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறியிருந்தால் அவர்கள் கூட அந்த உறவுக்கு ஒப்புதல் அளித்திருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

பிரதமர் மோடி ராஜேஸ் மிஸ்ராவை அழைத்து பேசி அவரின் மனநிலையை மாற்றும்படி பிரதமரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.


 

.