Read in English
This Article is From Jul 16, 2018

"இரயிலில் பிரசவமடைந்த தாய்க்கு உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது" - மும்பை சப்-இன்ச்பெக்டர்

ரயில்வே போலீஸ், ரயில்வே துறை மருத்துவக் குழு விரைவாக செயல்பட்டதால், தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்

Advertisement
விசித்திரம்

மும்பை கல்யாண் ரயில் நிலையத்துக்கு வந்த சல்மா தப்ஸம் என்ற பெண்ணிற்க்கு, இரயிலில் பிரசவம் பார்க்கப்பட்டதில், அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. சப்-இன்ச்பெக்டர் நித்தின் கவுர், இரு இரயில்வே பெண் போலீசார் ஆகியோர் சரியான நேரத்தில் உதவி செய்துள்ளனர்.

இது குறித்து சப்-இன்ச்பெக்டர் நித்தின் கவுர் பேசுகையில், “தப்ஸம் குறித்து எங்களுக்குத் தகவல் வந்தவுடன், அவரை வந்து பார்த்தோம். உடனேயே அருகிலிருக்கும் ரயில்வே துறை மருத்துவக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட பிறருக்குத் தகவல் கூறினோம். தப்ஸம் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் நல்ல உடன் நலத்துடன் இருக்கின்றனர். தப்ஸமுக்கு உதவி செய்தது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது’ என்றார்.

ரயில்வே போலீஸ், ரயில்வே துறை மருத்துவக் குழு விரைவாக செயல்பட்டதால், தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று தப்ஸமின் மாமியார் முஷ்ரப் ஜஹான் தெரிவித்துள்ளார். பிரசவத்திற்கு பிறகு, பராமரிப்பிற்காக தப்ஸமும் இரட்டை குழந்தைகளும் ருக்மனிபாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement