This Article is From Jun 06, 2020

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

கன்னியா குமரி, நெல்லை,  தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. வட மேற்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்
  • தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளது
  • சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் பல்வேறு மாவட்டங்களை சுட்டெரித்து வருகிறது. பல  இடங்களில் 100 டிகிரிக்கும் தாண்டி வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். இதனால் மழை ஏதும் வராதா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

இதற்கிடையே கேரளாவில் பருவமழை தொடங்கியதால், அதனையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் வெப்ப நிலை குறைந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். 

கன்னியா குமரி, நெல்லை,  தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. வட மேற்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

இந்த பகுதிகளில் மக்கள் காலை 11.30 முதல் மதியம் 3.30 வரையில் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.