This Article is From Sep 21, 2018

“வழக்கு தொடருங்கள்; இல்லாவிட்டால் வழக்கை சந்தியுங்கள்”-மு.க.ஸ்டாலின் சவால்

மின்சாரம் கொள்முதல் செய்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் அமைச்சர் தங்கமணி மீது ஒரு வாரத்தில் வழக்குத் தொடர்வதாக கூறினார்

Advertisement
தெற்கு Posted by

தமிழகத்தில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ. 9.17 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் தங்கமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் தங்கமணி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது-
அமைச்சர் தங்கமணி தவறான தகவல்களை அளித்து வருகிறார்.காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்களை நான் அளித்துள்ளேன். இது சம்பந்தமாக என்மீது வழக்கு தொடர்வதாக தங்கமணி கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் அவர் வழக்கு தொடராவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடர்வேன். குட்கா முறைகேடு தொடர்பாக சட்டசபையில் திமுகதான் முதலில் பிரச்னை எழுப்பியது. பின்னர் நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ. 9.17 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறி மு.க.ஸ்டாலின் தகவல்களை வெளியிட்டிருந்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement