‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழில் “பொருளாதாரத்தை வழிநடத்த ஒரு துருவ நட்சத்திரம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
New Delhi: பி.வி. நரசிம்ம ராவ் -மன்மோகன் சிங் கட்டமைத்த பொருளாதார கட்டமைப்பை பாஜக பின்பற்ற வேண்டும். பொருளாதாரத்தை மந்தமான நிலையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிரபல அரசியல் பொருளாதார நிபுணரான பரகல பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
‘தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் “பொருளாதாரத்தை வழிநடத்த ஒரு துருவ நட்சத்திரம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். பரகல பிரபாகர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகரான பரகல பிரபாகர் (60) நேருவின் பொருளாதார கட்டமைப்பை விமர்சித்ததற்காக ஆளும் கட்சியை விமர்சித்துள்ளார். இந்த விமர்சன்ம் இன்னும் அரசியல் தாக்குதலாகவே உள்ளது என்பதை கட்சியின் சிந்தனைக்குழு “உணரத் தவறி விட்டது” என்றும் கூறியிருந்தார்.
கணவரின் கட்டுரை குறித்து கேட்ட நிதி அமைச்சர், 2014 முதல் 2019 வரை “நாங்கள் அடிப்படை சீர்திருத்தங்களை செய்துள்ளோம்” என்றார். நிர்மலா சீதாராமன் சரக்கு மற்றும் சேவை வரி, ஆதார், சமையல் எரிவாயு விநியோகம் போன்ற நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
பாஜகவின் அரசியல் திட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சின்னமாக மாறியது போல, நரசிம்மராவ் அதன் பொருளாதார கட்டமைப்பிற்கு ஒரு வலுவான அடித்தளமாக மாறக்கூடும் என்று பிரபாகர் கூறுகிறார்.
“ராவ்- சிங் இவர்களின் பொருளதார கட்டமைப்பு பாஜகவுக்கு உதவக்கூடும். பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் பொருளாதாரத்தை தற்போதுள்ள நிலையிலிருந்து மாற்றவும் உடனடியாக இதை பின்பற்ற வேண்டும். பொருளாதார சிந்தனையில் உள்ள பலவீனத்தை நீக்குங்கள். இல்லையெனில் தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ் அப்களில் கூச்சலிடும் ஆய்வாளர்களின் சிந்தனைதான் பாஜகவுக்கு தொடர்ந்து கிடைக்கும்” என்று எழுதியுள்ளார்.
“அரசாங்கம் இன்னும் மறுப்பினை மட்டும் தெரிவித்துக் கொண்டிருக்கும்போது” பொது களத்தில் கிடைக்கும் தரவுகள் சூழ்நிலை தீவிரமான சவாலான நிலையை காட்டுகிறது.
அரசாங்கம் பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான அறிகுறிகளை காட்டவில்லை. சவால்களை புரிந்துகொள்ளும் தொலைநோக்கு பார்வை அரசுக்கு இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து கருத்துக்களை ஏற்றுக் கொள்ள பாஜகவிற்கு “விவரிக்க முடியாத தயக்கம்” உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.