Read in English
This Article is From Oct 30, 2018

மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பு! - பாஜக அமைச்சர் மீது குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் மாநில ஊரக வளர்ச்சித்துறையின் அமைச்சர் தான் சிங் ராவத் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார்

Advertisement
இந்தியா

தான் சிங்க் ராவத் ராஜஸ்தான் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆவார்.

Banswara:

மதத்தின் பெயரால், வாக்கு சேகரிக்க முயன்ற ராஜஸ்தான் மாநில ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் தான் சிங் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக கட்சியைச் சேர்ந்த ராவத் அக்.26ம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு, இந்து சமயத்தவர்கள் கண்டிப்பாக பாஜகவிற்கே வாக்களிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம்கள் காங்கிரஸிற்கு வாக்களிக்க முடியும் என்றால், இந்துக்கள் பாஜகவிற்கு நிச்சயமாக வாக்களித்து, அதிகபட்ச வாக்குகளை பெற்று கட்சி வெற்றி பெற உதவ வேண்டுமென்று கூறினார்.

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் டிசம்.7 ஆம் தேதி துவங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்.11ல் துவங்கும்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில், மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க பாஜக ஒருபோதும் எண்ணியது இல்லை. ஓட்டிற்கு மதமில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுகின்றவருக்கு அனைவரும் வாக்கு அளிப்பார்கள். என்று கட்டாரியா தெரிவித்தார்.
 

Advertisement
Advertisement