বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 07, 2020

காயமடைந்த ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக 3வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)
New Delhi:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடி கும்பல் தாக்குதல் நடத்தியத்கு முன்தினம், ஜன.4ம் தேதி சர்வர் அறையை அடித்து நொறுக்கியதாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மாணவர் சங்க தலைவர் தலைவர் உள்ளிட்டவர்களின் மீது செய்யப்பட்ட இந்த வழக்குப்பதிவானது, கடந்த ஆண்டு விடுதி கட்டண உயர்வு குறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஜேஎன்யூ நிர்வாகம் அளித்த புகாருடன் தொடர்புடையதாகும். அதில், செமஸ்டர் பதிவு செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், கணினி சர்வர் அறையை அடித்து நொறுக்கியது, தொழில்நுட்ப ஊழியர்களை மிரட்டியது என ஜேஎன்யூ நிர்வாகம் புகார் அளித்துள்ளது. 

ஜன.3 மற்றும் ஜன.4ம் தேதிகளில் முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதில், சர்வர் அறையை சேதப்படுத்தியதாகவும், பாதுகாப்பு காவலர்களை தாக்கியதாவகவும் மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட 8 பேர் பெயர் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. 

Advertisement

சர்வர் அறை சம்பவத்துடன் இந்த வழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும், எஃப்ஐஆரில் எத்தனை பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

பல்கலைக்கழக தொழில்நுட்ப ஊழியர்கள் கூறும்போது, முந்தைய நாள் மாணவர்கள் சர்வர்களை செயலிழக்க செய்ததாக கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் வளாகத்தை அணுகி ஊழியர்கள் சர்வர்களை சரிசெய்துள்ளனர். 

Advertisement

எனினும், மீண்டும் ஒரு கும்பல் 1 மணி அளவில் சர்வர் அறைக்குள் நுழைந்து மீண்டும் சேதப்படுத்தியதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரண்டாவது முறையாக மாலை 4 மணியளில் மீண்டும் சர்வர்கள் சரிசெய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

சர்வர் அறையை சேதப்படுத்தவும், மாணவர்களைத் தாக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் முகமூடி அணிந்த பாதுகாப்பு காவலர்களைப் பயன்படுத்தியதாக ஜேஎன்யூ மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. அசிங்கமாக அவர்கள் முகமூடி அணிந்து செயல்பட்டுள்ளனர் என்று வெளிப்படையாக ஜேஎன்யூ மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

Advertisement

ஜேஎன்யூ நிர்வாகமானது, சர்வர் அறை சேதப்படுத்தப்பட்ட சம்பவமானது, விடுதி கட்டண உயர்வு தொடர்பாக மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் இடையில் நடந்து வரும் மோதல் தொடர்புடையது என்று கூறியுள்ளது. 

எனினும், ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை சம்பவமானது சர்வர் அறை சேதப்படுத்தப்பட்டதுடன் தொடர்புடையது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

With input from PTI

Advertisement