This Article is From Feb 27, 2020

டெல்லியில் வெறுப்பைத் தூண்டும்படி பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் 4-வது நாளாகத் தொடரும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-யை தாண்டியுள்ளது. 180-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Highlights

  • டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது
  • டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
  • ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றன

டெல்லியில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் 4-வது நாளாகத் தொடரும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-யை தாண்டியுள்ளது. 180-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி முடிவு எடுக்கவுள்ளது. 1984-ல் ஏற்பட்ட சீக்கிய கலவரத்தைப் போன்றதென்று மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் அச்சம் தெரிவித்துள்ளது.
 

டெல்லி வன்முறையைத் தூண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

விசாரணையின்போது அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, காவல் துணை ஆணையர் ராஜேஷ் ராவ் ஆகியோர் பாஜக தலைவர் கபில் மிஷ்ராவின் பேச்சைக் கேட்டார்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு துஷார் மேத்தா, தான் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்றார். ராஜேஷ் ராவ், தான் அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மாவின் வீடியோக்களை மட்டும்தான் பார்த்ததாகவும், கபில் மிஷ்ராவின் வீடியோவை பார்க்கவில்லையென்றும் கூறினர்.

Advertisement

இதையடுத்து நீதிபதி முரளிதர், 'மாநில விவகாரம் குறித்து டெல்லி போலீசார் எவ்வளவு அக்கறையாக உள்ளனர் என்பது எனக்கு வியப்பைத் தருகிறது' என்று கூறி, நீதிமன்ற பணியாளர் ஒருவரை அழைத்து, 'கபில் மிஷ்ராவின் வீடியோவை இந்த அறையில் ஒளிபரப்புங்கள்' என்றார்.

Advertisement