ஹைலைட்ஸ்
- நேற்று மாலை 4 மணிக்கு தான் தீ விபத்து குறித்து தெரிந்துள்ளது
- இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை
- உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
லண்டனில் இருக்கும் மாண்டரின் ஓரியன்டல் ஓட்டலில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகர் ராபி வில்லியம்ஸும் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக, அவர் பத்திரமாக மீடகப்பட்டார்.
லண்டன், ஹைட் பார்க்கில் தான் மாண்டரின் ஓரியன்டல் ஓட்டலின் 12-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று மாலை 4 மணி அளவில் இது குறித்து தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு 20 தீயணைப்பு வண்டிகளும், 120 தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். அவர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சிலருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஓட்டலில் இருந்த மற்றவர்களைப் போல, ராபி வில்லியம்ஸும், உணவகத்தில் தீ பிடித்துள்ளது என்பதை அறிந்து வெளியே வந்துள்ளார். அவருக்கு எதுவம் ஆகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்த ஆம்புலன்ஸ் டிரைவர், `தீ விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு மீட்பு பணிகள் உடனடியாக நடக்க ஆரம்பித்தன. ஓட்டலில் இருந்து பலர் வெளியே வந்துவிட்டனர். நல்ல வேளையாக 12 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கீழே இருக்கும் தளங்களில் தீ கசிந்து பரவியிருந்தால் சேதாரம் மிக அதிகமாக இருந்திருக்கும்' என்று கூறினார்.
5 நட்சத்திர ஓட்டலான மாண்டரின் ஓரியன்டலில், கடந்த மே மாதம் தான் ரீ-டிசைனிங் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 185 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து புதிதாக ஓட்டல் வடிவமைக்கப்பட்ட நிலையில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)