This Article is From Aug 22, 2018

மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 4 பேர் பலி!

தெற்கு மும்பையில் இன்று காலை அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 4 பேர் பலி!
Mumbai:

தெற்கு மும்பையில் இன்று காலை அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகவும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் பரவி வந்த தீ தற்போது கட்டுக்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கிரிஸ்டல் டவர் என்ற அந்த அடுக்குமாடி கட்டடத்திலிருந்து பல மணி நேரம் தொடர்ந்து புகை வந்துள்ளது. மும்பையின் பரேலுக்கு அருகில் இருக்கும் ஹிந்த்மாதா திரையரங்கம் பக்கத்தில் கிரிஸ்டல் டவர் கட்டடம் இருக்கிறது. இது லெவல்-2 தீ விபத்து என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து கட்டுபாட்டு அறைக்கு காலை 8:32 மணிக்கு அழைப்பு வந்தது என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். 

i836nho

தீயணைப்புப் படையினர் தொடர்ந்து கிரேன் உதவி கொண்டு கட்டடத்துக்குள் இருக்கும் மக்களை மீட்டனர்.

8 தீயணைப்பு வண்டிகள், 4 தண்ணீர் லாரிகள், போலீஸ் மற்றும் எலக்ட்ரீஷியன்கள் தீயை கட்டுக்குள் கொண்ட வர போராடியுள்ளனர். 

17 மாடிகள் கொண்ட கட்டடத்தின் 12வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அடுத்தடுத்த மாடிகளுக்கு தீ பரவியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கமலா மில்ஸின் மாடியிலிருந்த பப்பில் தீ பிடித்ததை அடுத்து 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

.