Fire at PM Modi's residence: சிறிய அளவிலான தீ விபத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Delhi: டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் பிரதமர் இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 7.15 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு 17 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சிறிய அளவிலான தீ விபத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், சார்ட் சர்க்கியூட் காரணமாக லோக் கல்யானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், தீ விபத்து ஏற்பட்டது பிரதமர் இல்லமோ அல்லது அலுவலகமோ அல்ல, SPG பரிவினரின் வரவேற்பு அறை உள்ள LKM காம்ப்ளக்ஸில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது மேலும் தீ பரவாமல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.