Delhi fire: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது
New Delhi: நேற்று வடக்கு டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் பகுதியில் குடியிருப்புகள் பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 43 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று காலையும் தீ விபத்து நடந்த கட்டிடத்தில் புகை வெளியேறியதை கண்டு தீ அணைப்பு வாகனங்கள் அந்த இடத்தை அடைந்துள்ளன.
இந்த கட்டிடம் முறையான அரசு அனுமதி பெறவில்லை. கட்டிடத்தில் வெளியேறுவதற்கான சிறப்பு வழிகள் ஏதும் இல்லை. மேலும், பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதால் மூச்சு திணறி தப்ப முடியாமல் இறந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து உரிமையாளர் ரெஹான் மற்றும் அவரது சகோதரரையும் கைது செய்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ள அபாயமும் உள்ளது.