This Article is From Feb 27, 2019

முதுமலையில் கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ – பற்ற வைக்க முயன்றவர் கைது

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 250 ஏக்கர் அளவுள்ள காட்டுப்பகுதி தீயில் கருகி நாசம் ஆனது.

முதுமலையில் கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத் தீ – பற்ற வைக்க முயன்றவர் கைது

காட்டுத் தீயை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புலிகள் காப்பகத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Udhagamandalam:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 4 நாட்களாக எரிந்து வந்த காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. யானையை விரட்டுவதற்காக காட்டுக்குள் தீயை பற்ற வைக்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 250 ஏக்கர் அளவுள்ள வனப்பகுதி காட்டுத் தீயில் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவத்தை தொடர்ந்து புலிகள் காப்பகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காட்டுக்குள் தீயை பற்ற வைக்க முயன்றதாக 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்பநாடு வனப்பகுதியில் லேசாக தீப்பிடித்தது என்று வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் தீயை பற்ற வைத்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, யானை மற்றும் புலிகளிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தீயை பற்ற வைக்க முயன்றேன் என்று தெரிவித்தார்.

அவரை கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

முதுமலையில் ஏற்பட்ட காட்டுத் தீ கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் ஏற்படாதது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

 

.