This Article is From Nov 18, 2018

யானைக்கென்றே ஸ்பெஷல் ஹாஸ்பிடல் ! எங்க இருக்கு தெரியுமா...

டெல்லியில் யானைகளுக்காக ஸ்பெஷல் மருத்துவமனையொன்று தொடங்கப்பட்டுள்ளது

யானைக்கென்றே ஸ்பெஷல் ஹாஸ்பிடல் ! எங்க இருக்கு தெரியுமா...

நவீன தொழில்நுட்பங்களுடன் திறக்கப்பட்ட யானைக்களுக்கான ஸ்பெஷல் ஹாஸ்பிடல்

Mathura/Agra:

டெல்லியில் யானைகளுக்காக ஸ்பெஷல் மருத்துவமனையொன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பல நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆக்ராவில் உள்ள சூர்முரா கிராமத்தில் அமையப்பெற்ற இந்த மருத்துவமனையில் டிஜிட்டல், எக்ஸ்ரே, லேசர் சிகிச்சை, டேன்டல் எக்ஸ்ரே என பலவகையான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையை டிவிஷ்னல் கமிஷனர் அனில் குமார் திறந்து வைத்தார்.

யானைகள் பாதுகாப்பு மையத்தின் அருகே இந்த புதிய மருத்துவமனை அமைந்துள்ளது. யானைகளுக்கு அடிபட்டாலோ அல்லது நீண்டநாள் சிகிச்சை அளிக்கவும் இந்த மருத்துவமனை உதவுகிறது.

இங்கு வரும் கால்நடைமருத்துவ மாணவர்களுக்கு, யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பாதுகாப்பான இடத்தில் இருந்து கவனிப்பதற்க்கு வசதியாக பார்வையாளர் அரங்கமும் கட்டப்பட்டுள்ளது.

‘இந்த வசதிகள் மூலம் யானைகளை இன்னும் நன்றாக கவனித்து கொள்ள முடியும். இது யானைகள் பாதுகாப்பதில் நாம் எடுக்கும் முதல் அடி இந்நிலை தொடர்ந்தால் இந்த மருத்துவமனையினால் மனிதர்களுக்கும் யானைக்கும் இடையேயான சூழலியல் தொடர்பு முன்னேற்ற பாதையில் செல்லும்' என ‘வைல்டுலைஃவ் எஸ்.ஓ.எஸ்' (Wildlife SOS) என்ற தொண்டு நிறுவனத்தின் சி.யி.யோ கார்த்திக் நாராயணன் தெரிவித்தார்.

.