This Article is From Jan 17, 2020

ஜெயலலிதா பயோ பிக்-ல் இவர்தான் எம்.ஜி.ஆர்!! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் எம்.ஜி.ஆர். வேடத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

ஜெயலலிதா பயோ பிக்-ல் இவர்தான் எம்.ஜி.ஆர்!! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சுவாமியின் ஃபர்ஸ்ட் லுக்.

ஹைலைட்ஸ்

  • இந்தாண்டு ஜூன் மாதம் திரைக்கு வருகிறது தலைவி திரைப்படம்
  • எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது
  • ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா கடந்த நவம்பரில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்
New Delhi:

தலைவி என்ற பெயரில் படமாக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய வேடத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது.

கங்கனாவும் கடந்த நவம்பர் 23-ம்தேதி தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தார். அடுத்ததாக எம்.ஜி.ஆர். வேடத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று, தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சுவாமியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வெளியிட்டுள்ள அரவிந்த் சுவாமி, ‘தலைவி படத்தில் புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் எனது ஃபர்ஸ்ட் லுக்' என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் பல்வேறு வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., அரசியல் வாழ்விலும் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார்.

திமுகவிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த அவர், கட்சியில் ஜெயலலிதாவை சேர்த்ததுடன் அவரது அரசியல் வாழ்வு உயர்வுக்கும் முக்கிய காரணமாக இருந்தார். தமிழகத்தின் மூன்றாவது முதல்வராக கடந்த 1977-ல் பொறுப்புக்கு வந்த அவர், தான் இறந்த 1987 வரையில் அதே பதவியில் நீடித்தார்.

அவர் உயிரிழந்தபோது, எம்.ஜி.ஆரின் சடலம் அருகே 2 நாட்களாக ஜெயலலிதா நின்று கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர், கட்சி சில சிக்கல்களை சந்தித்து கடைசியில் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

கடந்த 1991-ல் முதன்முறையாக தமிழகத்தின் இளம் முதல்வரானார் ஜெயலலிதா.

அரசியல் வாழ்வை தவிர்த்து சினிமாவில், 1965-ல் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முதன்முறையாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். இந்த ஜோடியின் கடைசிப் படம் 1973-ல் வெளிவந்த பட்டுக்காட்டு பொன்னையா என்பதாகும்.

கடந்த 2016 டிசம்பரில் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஒருமுறை அவர் அளித்திருந்த பேட்டியில், ‘ எனது வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை அம்மாவுடன் கழித்தேன். வாழ்வின் இன்னும் இரு பகுதிகளில் ஒன்றில், எம்.ஜி.ஆர். முக்கிய பங்கை வகித்தார்' என்பதாக குறிப்பிட்டிருந்தார்.

:

தலைவி படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.:

தலைவி திரைப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இதுதொடர்பான ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக மிகவும் மெனக்கெட்டுள்ளார் கங்கனா. இதற்காக அவர் ஹார்மோன் மாத்திரைகளை உட்கொண்டதாக நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

தலைவி திரைப்படத்தை விஜய் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை 2020 ஜூன் 26-ம்தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

.