This Article is From May 31, 2019

மோடி அரசு பதவியேற்ற நிலையில் ஜூன் 17 - ஜூலை 26 வரை நாடாளுமன்றம் நடைபெறுகிறது!!

நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு பதவியேற்ற நிலையில் ஜூன் 17 - ஜூலை 26 வரை நாடாளுமன்றம் நடைபெறுகிறது!!

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது.

New Delhi:

மத்தியில் மோடி அரசு புதிதாக பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் மாதம் 17-ம்தேதி  தொடங்கி ஜூலை 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நாள் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற கூட்டு அவையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். 

தற்போது தற்காலிக சபாநாயகராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 19-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்தியில் தொடர்ந்து 2-வது முறையாக மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் மட்டுமே தொடர்ந்து 2 முறைய பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர்கள். அந்த பட்டியலில் மோடியும் இணைந்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்றது. 

கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 8 இடங்கள் கூடுதலாக கிடைத்து, 52 இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது. 

.