Read in English
This Article is From Sep 24, 2019

First Transgender Library: இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் நூலகம் மதுரையில் திறப்பு!

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 4 லட்சத்தி 90 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரம் பேர் உள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Edited by

திருநங்கைகள் நல மையத்தின் ஒரு பகுதியாக மதுரையில் திருநங்கைகளுக்கான நூலகம் திறக்கப்பட்டுள்ளது. (File)

Madurai:

இந்தியாவில் முதல்முறையாக திருநங்கைகள் நல மையத்தின் ஒரு பகுதியாக, மாற்று பாலின மக்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதுரை விஸ்வநாதபுரத்தில் திருநங்கைகளுக்கான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திருநங்கைகள் நல மையத்தின் இயக்குநர் பிரியா பாபு கூறும்போது, 'மாற்று பாலின குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்து தேசிய குழந்தைகள் கொள்கையில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கைகள் குறித்த பாடங்களை பள்ளி கல்வி முறையில் சேர்க்க வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார். 

2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மையம், திருநங்கைகளை ஊக்குவிக்கவும், மாற்று பாலினத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

Advertisement

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 4 லட்சத்தி 90 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரம் பேர் உள்ளனர். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement