New Delhi: புதுடில்லி: கடந்த ஆகஸ்டு மாதம் கேரளாவில் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தீவிரமான மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக நிவாரண பணிகளில் ஈடுபட்ட கேரள மீனவர்கள், ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளனர்
கேரள மீனவர்களின் உதவியைக் கண்டு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில், கடலோர பகுதிகளில் உள்ள காவல் பணிகளுக்காக கேரள மீனவர்கள் 200 பேருக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளதாக மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்
மேலும், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு சான்றிதழ் அளித்து கெளரவித்தார்
கேரள மீனவர்களின் பெரும் உதவியால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகளில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் பணிகளில் கேரள மக்கள் ஈடுபட்டுள்ளனர்.