திருப்பதியில் இருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள கடபள்ளி அருகே வேகமாக வந்த லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். விருபக்ஷபுரத்தில் உள்ள நேச்சுரோபதி (இயற்கை மருத்துவம்) கிளினிக்குக்குச் சென்றுவிட்டு தர்மபுரிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
“உயிரிழந்த ஐவருள் ஒருவர் பெண். சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மற்ற இருவரின் உயிர் பிரிந்தது” என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு போலிசார் அவரை விசாரித்து வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)