This Article is From Jul 07, 2020

11, 12ஆம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து; தமிழக அரசு அறிவிப்பு

11. 12ஆம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிவிக்கப்பட்டிருந்த 5 பாடங்கள் முறை திட்டத்தை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை இன்று காலை அறிவித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

11, 12ஆம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து; தமிழக அரசு அறிவிப்பு

Highlights

  • 11, 12ஆம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து;
  • பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு
  • பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும்

11, 12ஆம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஐந்து பாடங்கள் முறை திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. 

11, 12ஆம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. 

இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த கல்வி ஆண்டு முதலே புதிய நடைமுறையை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, 11ஆம் வகுப்புக்கு தற்போது நடைமுறையிலுள்ள, ஆறு பாடங்கள், 600 மதிப்பெண் என்பதை மாற்றி, ஐந்து பாடங்கள், 500 மதிப்பெண்களாக நடப்பாண்டு குறைத்து அறிவிக்கப்பட்டது, மாணவர்களின் நலன் கருதி திரும்ப பெற வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

Advertisement

இந்நிலையில், 11, 12ஆம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிவிக்கப்பட்டிருந்த 5 பாடங்கள் முறை திட்டத்தை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை இன்று காலை அறிவித்துள்ளது. பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, 11, 12ஆம் வகுப்புகளில் பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement