This Article is From Jun 17, 2018

கனமழையால் அசாம், திரிபுரா மாநிலங்களில் 17 பேர் உயிரிழப்பு

வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் உள்ள 22,624 வீடுகள் சேதம் அடைந்துள்ளதால், 48 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட உள்ளன

கனமழையால் அசாம், திரிபுரா மாநிலங்களில் 17 பேர் உயிரிழப்பு

ஹைலைட்ஸ்

  • அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு
  • மேற்கு இம்பால் பகுதியைச் சேர்ந்த 1.8 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
  • அசாம் மாநிலத்தில் 4.25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டன
Assam: அசாம்: அசாம் மாநிலத்தில் வெள்ளம் தீவிரமடைந்ததில், உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை முதல் மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வெள்ள பாதிப்புகளில் இருந்து நிலைமை முன்னேறி வருகிறது.

கனமழையால் மாஹூர், ஹரங்கஜாவொ, மெய்பாங் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்புகளால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளதாக அசாம் பேரிடர் மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள ஹோஜாய், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், கோலாகாட், கரிம்கான்ஞ், ஹைலாக்கண்டி மற்றும் கச்சார் ஆகிய பகுதிகளில் உள்ள 4.25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகபட்சமாக, கரிம்கான்ஞ் பகுதியை சேர்ந்த 1.95 லட்சம் மகக்ளும், ஹைலாக்கண்டி பகுதியை சேர்ந்த 1.89 லட்சம் மக்களும் வெள்ள பாதிப்புகளில் சிக்கியுள்ளனர்.

மனிப்பூர் மாநிலம், மேற்கு இம்பால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வெள்ளத்தில் உயிர் இழந்துள்ளார். மேற்கு இம்பால் பகுதியைச் சேர்ந்த 1.8 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல், இம்பால் பகுதிகளில் பாதிப்படைந்த பகுதிகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் உள்ள 22,624 வீடுகள் சேதம் அடைந்துள்ளதால், 48 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

திரிப்புரா மாநிலத்தில், 189 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 40,000 மக்கள் வெள்ள பாதிப்புகளில் இருந்து முன்னேறி வருவதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். அதைப்போல, மிசோரம் மாநிலத்திலும் நிலைமை வெள்ள பாதிப்புகளில் இருந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
.