This Article is From Nov 13, 2018

பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பாலுட்டி மனிதநேயத்தை நிலைநாட்டிய விமான பணிப்பெண்!

‘நீங்கள் செய்தது மனிதநேயத்தின் உதாரணம்’ எனவும் ‘ அழகு, அற்புதம்! ’ என் ஆசிர்வாதம்’ என கமென்ட்டுகள் பதிவாகியுள்ளது.

பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பாலுட்டி மனிதநேயத்தை நிலைநாட்டிய விமான பணிப்பெண்!

பிலிப்பையின்ஸ் நாட்டைச் சேர்ந்த பாட்ரிஷா ஓரகானோ (24) விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த நிலையில், தான் பயணித்த அதிகாலை விமானத்தில் பசியால் தவித்த பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பாலுட்டி பயணிகளின் மனதை வென்றுள்ளார்.

'நான் அக்குழந்தையின் தாயிடம் ஏதாவது பிரச்சனையா என கேட்டபொழுது, அவர் கண்கலக்கத்துடன் தன்னிடம் தாய்பால் இல்லாத காரணத்தால் பிள்ளையின் பசியை தீர்க்க முடியவில்லை என தெரிவித்தார். அப்பொழுது என்னிடம் அந்த குழந்தைக்கு கொடுக்க தாய்பால் மட்டுமே உள்ளதென உணர்தேன் அதனால் நான் யோசிக்காமல் கொடுத்தேன்'என தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

‘அந்த குழந்தையின் பசியை தீர்த்தபோது அத்தாயின் கண்களில் என்னால் நிம்மதியை உணரமுடிந்தது, விமானத்திலிருந்து இறங்கும் முன்னர் என்னிடம் அவரது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்' என தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இணையத்தில் வெளியிடப்பட்டதால் இந்த பதிவிற்கு 36,000 பகிர்வுகளும், 8000 கமெண்ட்டுகளும் வந்துள்ளது. மேலும் பலர் தங்களது பாராட்டுக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

 
 

‘நீங்கள் செய்தது மனிதநேயத்தின் உதாரணம்' எனவும் ‘ அழகு, அற்புதம்! ' என் ஆசிர்வாதம்' என கமென்ட்டுகள் பதிவாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜென்டினாவில், பெண் போலீசார் ஒருவர் மருத்துவமனையில் சத்து குறைப்பாடு உள்ள குழந்தைக்கு தாய்பால் கொடுத்து இணையத்தில் வைரல் ஆனது என்பது கூடுதல் தகவல்.

Click for more trending news


.