சீனாவின் கிழக்கு சியாங் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
Guwahati: இந்தியா – சீனா எல்லையில் அருணாசல பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. இதன் அருகே சீன பகுதியில் ஓடும் யர்லுங் சாங்போ ஆற்றில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்று நீர் முழுவதும் அருணாசல பிரதேசத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யர்லுங் ஆற்றின் அருகே இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடஙகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சீன பகுதியான கிழக்கு சியாங்கிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சியாங் ஆற்றின் அருகேயிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறும், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. நினோங் எரிங் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சீன பகுதியில் ஏற்பட்ட கனமழையால் சியாங் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அசாம் மாநிலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த சம்பவத்தின்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விமானம் மூலமாக மீட்கப்பட்டனர்.