Read in English
This Article is From Aug 18, 2018

மதுரை, தேனி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தமிழகத்தின் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Advertisement
தெற்கு
Chennai:

தமிழகத்தின் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவேரி மற்றும் பவானி ஆற்றங்கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் உள்ளிட்ட மூன்று அணைகளிலிருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு அதிகாரிகள், ‘மேட்டூர், பவானி சாகர் மற்றும் அமராவதி அணைகளிலிருந்து கூட்டாக 2.30 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக இந்த அணைகள் தற்போது நிரம்பி வழிகின்றன. இதையொட்டி, 8,410 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து 2.07 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்படும் நிலையில், மேட்டூர் அணைக்கு 1.70 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

Advertisement

‘இந்த அதிக நீர் வரத்தினால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.24 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். இந்நிலையில் 1.70 லட்சம் கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது’ என்றுள்ளனர் அரசு அதிகாரிகள்.

பெரியாறு மற்றும் வைகை அணைகளிலிருந்து அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் அங்கிருந்து பத்திரமான இடத்துக்குச் செல்லும்படி அறிவுறுத்துகிறோம் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனுடன், தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், தர்மபுரி, திருச்சியில் 96 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 8,410 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதில் ஈரோட்டில் தான் அதிகபட்சமாக, 66 முகாம்களில் 5875 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அங்கு 300 ஹெக்டர் அளவிலான பயிர்கள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement