This Article is From Aug 11, 2018

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் அம்மாநில அரசு அதிக நீர் திறந்துவிட்டுள்ளது

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் அம்மாநில அரசு அதிக நீர் திறந்துவிட்டுள்ளது. சுமார் 1 லட்ச கன அடிக்கும் மேலான நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், தமிழகத்தில் காவிரியை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து நேற்று ஒரு லட்சம் கன அடிக்கும் மேலான நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் சேலத்தில் இருக்கும் மேட்டூர் அணையை இன்று வந்தடையும். 

இதையடுத்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள், காவிரி ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, ‘எது நடந்தாலும் அதற்கு ஏற்றாற் போல் விரைந்து நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். 

சில நாட்கள் முன்னர் வரை மேட்டூர் அணைக்கு 16,900 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது ஒரே நாளில் 60,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் எனத் தெரிகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.