This Article is From Aug 06, 2018

வைரல் வீடியோவுக்கு நடனம்: உலக ஹிட் அடித்த தெலுங்கானா காம்போ!

உலக அளவில் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ என்ற பாடலுக்கு காருக்கு வெளியே நடனமாடும் ஒரு சேலஞ்ச் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது

New Delhi:

உலக அளவில் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ என்ற பாடலுக்கு காருக்கு வெளியே நடனமாடும் ஒரு சேலஞ்ச் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த இரண்டு பேர், வயல்வெளியில் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதுதான் தற்போதை உலக வைரல்.

கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஷிகி, பாப் பாடகர் டிரேக்கின் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ என்ற பாட்டுக்கு நடனமாடி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், கார் கதவைத் திறந்து அவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் படு வைரலானது. இதையடுத்து, #InMyFeelingsChallenge என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டானது. தொடர்ந்து அந்த ஹாஷ்டேக்கில் பல்லாயிரம் பேர் ஷிகி போலவே நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானாவைச் சேர்ந்த இரண்டு பேர், மாட்டில் ஏர்பூட்டியபடி இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இவர்கள் நடனத்தைத் திட்டமிட்டு வெளிக் கொண்டு வந்தது ஸ்ரீராம் ஸ்ரீகாந்த் என்பவர்தான்.

வீடியோவில் நடனமாடியிருப்பவர்களில் ஒருவர் 24 வயதாகும் நடிகர் அனில் குமார். இன்னொருவர் 28 வயதாகும் விவசாயி பிள்ளை திரப்பதி. இருவரும் கிகி சேலஞ்ச் பாடலுக்கு மாஸாக போட்ட ஆட்டத்தைத் தான் உலக பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நிமிடத்துக்கு நிமிடம் இந்த காம்போவின் புகழ் உச்சம் அடைந்து கொண்டே இருக்கிறது.

இது குறித்து ஸ்ரீகாந்த், ‘இந்த வீடியோவை நாங்கள் திட்டமிட்டு எடுக்கவில்லை. ஆனால், சரியான ஷாட் எடுக்க 2 மணி நேரம் ஆனது. இதை இணையத்தில் பதிவேற்றிய நிமிடத்திலிருந்து ஹிட்தான்’ என்று வெற்றி ரகசியம் பகிர்ந்துள்ளார்.

.