This Article is From Jan 18, 2019

போஸ்ட் வைரலாக இப்படி எல்லாமா செய்வாங்க?

வைரல் ஆக்கவே இப்படி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

போஸ்ட் வைரலாக இப்படி எல்லாமா செய்வாங்க?

கடலுக்குள் தாவும் வாலிபர்

ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ வைரல் ஆகுவதற்காக, கப்பலின் 11 வது மாடியில் இருந்து கடலில் தாவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒருவர்.

27 வயதான அந்த வாலிபர் வாஷிங்டனை சேர்ந்த நிக்கோலே நார்தேவ் என தெரிய வந்துள்ளது. ராயல் கரீபியன் கப்பலில் பயணித்த அவர், பஹமாஸில் இந்த விபரீதத்தை செய்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கு பின், அந்த வாலிபரையும் அவருடன் பயணித்த அவரது நண்பர்களையும் ராயல் கரீபியன் நிறுவனம் தங்களது கப்பலில் இனி பயணிக்க தடை செய்துள்ளது.

அந்த வீடியோ:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Full send

A post shared by Nick Naydev (@naydev91) on

 

முன் தின இரவு அருந்திய மதுவின் தாக்கம் இருந்ததால் தான் இப்படி செய்தேன் என நிக்கோலே தெரிவித்தார்.

இந்த வீடியோவை தன் சமூக வலைதளத்தில் பதிவித்தார் நிக்கோலே. அவரது இந்த செயலுக்கு பலர் முட்டாள் தனமான செயல் என கமண்ட் செய்துள்ளனர்.

நிக்கோலே தாவும் வீடியோவை அவரது நண்பர்கள் பதிவு செய்தனர். வைரல் ஆக்கவே இப்படி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளது ராயல் கரீபியன் நிறுவனம்.

Click for more trending news


.